பேஸ்புக் பயனர்கள் தகவல்கள் அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகாரமாய் வெடித்திருக்கும் நிலையில், உங்களை பற்றி பேஸ்புக் தெரிந்து வைத்திருப்பதை கண்டறிவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

பேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் திருட்டுத் தனமாக பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் தவறை ஒப்புக் கொண்டு, அடுத்தக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். 

டேட்டா வெளியான விவகாரம் பேஸ்புக் கணக்கை அழிக்க வைக்கும் அளவு #DeleteFacebook ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. பேஸ்புக் கணக்கை அழிப்பது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம். எனினும் ஒவ்வொரு பயனர் குறித்து பேஸ்புக் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் என்ன என்பதை நம்மால் சரிபார்க்க முடியும்.

இவற்றை இரண்டு அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும். முதலில், உங்களுக்கு வழங்கப்படும் விளபம்ரங்களுக்காக பேஸ்புக் வைத்திருக்கும் தகவல்கள். இரண்டாவதாக நீங்கள் ஷேர் செய்த போஸ்ட் விவரங்கள், அப்லோட் செய்த புகைப்படங்கள், அனுப்பிய மெசேஜ்கள் மற்றும் கிளிக் செய்தவை அடங்கும்.