சிங்கபூரில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இந்திய வைத்தியருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த லூக்கா மணிமாறன் தேகராஜா சிங்கப்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில்  பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்த போது  இளம்பெண் ஒருவர்  தனக்கு முதுகு மற்றும்  இடுப்பில்  வலி இருப்பதாக கூறி மணிமாறனிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார்.

தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் சிகிச்சை அளிப்பதாக கூறி அவரது ஆடையை அவிழ்க்க சொல்லி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

தன்னிடம் வைத்தியர் தவறாக நடந்து கொண்டார் என கூறி குறித்த இளம் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் இந்திய வைத்தியர் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

விசாரணையின்போது வைத்தியர் மீதான  பாலியல் தொல்லை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு 3 பிரம்படி தருமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.