பரிசுத்த பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ் திருத்­தந்­தை­யினால் 2016 ஆம் ஆண்டு இரக்­கத்தின் வரு­ட­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அதனை முன்­னிட்டு கொழும்பு பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையின் தலை­மையில் நேற்று கொழும்பு புனித லூசியா பேரா­­லயத்தில் கத்தோலிக்க திருச்­ச­பையின் பாரம்­ப­ரிய முறை­யிலானதிருப்­பலி ஒப்­புக்­கொ­டுக்­கப்­பட்­டது. இந்த திருப்­ப­லியில் கீதங்கள் உள்­ளிட்ட அனைத்து ஆராதனைகளும் இலத்தீன் மொழியில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.