(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று கூட்டு எதிர்க்கட்சியினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பாராளுமன்றத்தில்   கையளிக்கப்பட்டது.

 முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம்  கையளித்தனர். 

இந்த பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சியினர் 51 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் நால்வரும் கையொப்பமிட்டுள்ளனர். 

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த பிரேரணையில் கையொப்பமிட்டிருக்கவில்லை.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி, சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த போது கண்டி வன்முறை ஏற்பட்டமை, ஒன்பது தடவைகள் சட்ட விதிமுறையை மீறி சட்டங்களை  நிறைவேற்றியமை போன்ற 14 குற்றச்சாட்டுகளை முன்வைத்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சியினர் கொண்டு வந்துள்ளனர்.