இலங்கையின் புகழை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் வீர வீராங்கனைகளை உருவாக்கும் “Crysbro Next Champ” செயற்திட்டம்

Published By: Priyatharshan

21 Mar, 2018 | 06:32 PM
image

பல்வேறு விளையாட்டுக்களில் இலங்கை சர்வதேச மட்டத்தில் வெற்றி பெற்றாலும் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களையே இதுவரை வென்றெடுத்துள்ளது. 

2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் சுசந்திகா ஜெயசிங்க வென்றெடுத்த பதக்கத்துக்கு பிறகு இதுவரை ஒலிம்பிக்கில் இலங்கை பதக்கமொன்றை வெல்லவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகளின் திறமையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு தமது இலாபத்தை விளையாட்டுத் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் குறைவாகவே உள்ளன. 

அத்தகைய நிறுவனங்களில் ஒன்றான கிறிஸ்ப்றோ வர்த்தக நாமத்தை கொண்ட பார்ம்ஸ் ப்றைட் நிறுவனமானது இலங்கை வீர வீராங்கனைகளை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில் “Crysbro Next Champ”என்ற திட்டத்தை ஆரம்பிக்கின்றது.

பார்ம்ஸ் ப்றைட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மொஹமட் இம்தியாஸின்  எண்ணக் கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படுகின்ற “Crysbro Next Champ” செயற்திட்டம் மார்ச் 14 ஆம் திகதி கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த திட்டம் ஊடாக வீர வீராங்கனைகளை அறிமுகப்படுத்தல், புகழ் பெற்ற வீர வீராங்கனைகளின் அனுபவ அறிவை புதிய வீரர்களிடையே பகிர்ந்து கொள்ளல், வீரர்களுக்கான உடல் மற்றும் போஷாக்கு தொடர்பான அறிவுரை வழங்குதல், சர்வதேச வீர வீராங்கனைகள் பெற்ற வெற்றிகளுக்கான காரணம் மற்றும் தகவல்களை எடுத்துரைத்தல் போன்றன உள்ளடங்கும். அதுதவிர வீர வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் “Crysbro Next Champ”என்ற பெயரில் வருடாந்த விருது வழங்கல் விழாவை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருது விழாவில் 100 மீற்றர் ஒட்டப் போட்டிரூபவ் 400 மீற்றர் ஒட்டப் போட்டி, உயரம் பாய்தல், ஈட்டி எறிதல், சிறந்த துடுப்பாட்ட வீரர் உள்ளிட்ட Crysbro Next Champ of the Year விருதுகள் 30 வழங்கப்படவுள்ளன.

Crysbro Next Champ நிகழ்ச்சி பிரதி சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு செனல் ஐ அலைவரிசையில் ஒளிபரப்படுகின்றது. Crysbro Next Champ முகநூல் பக்கம் ஊடாக பொருளாதார உதவிகள் தேவையான வீர வீராங்கனைகளுக்கு மக்களின் ஒத்துழைப்புடன் நிதி உதவியும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படும்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பார்ம்ஸ் ப்றைட் நிறுவனத்தின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் அமோரேஸ் செலா, ஆரோக்கியமான மற்றும் பலமான சந்ததியை நாட்டுக்கு வழங்கும் நோக்கில் எமது நிறுவனம் முன்னெடுக்கும் “Crysbro Next Champ” நிகழ்ச்சி ஊடாக அனைத்து திறமையான வீர வீராங்கனைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு வர நாம் எதிர்பார்க்கின்றோம். அதன்மூலம் அவர்கள் இலங்கைக்காக பிரகாசிக்கும் வீரர்களாக உருவாக்குவதே எமது நோக்கம் என கூறினார்.

உள்ளுர் நிறுவனமாக தமது துறையில் முன்னணி இடத்திற்கு வந்துள்ள பார்ம்ஸ் ப்றைட் நிறுவனம் தமது கிறிஸ்ப்றோ உற்பத்தியான கோழி இறைச்சியின் தரம் மற்றும் போஷாக்கு தொடர்பாக அதிக கவனம் செலுத்துகின்றது. நவீனமயப்படுத்தலுடன் உற்பத்திகள் இடம்பெறுகின்றது. அத்துடன் உயர்தரத்துடனும் இயற்கை நிலையிலும் செழிப்பாக வளர்க்கப்படும் சோளம், சோளக் கதிர்மணி, நெல் போன்றவை கோழிகளுக்கு வழங்கப்பட்டு அவை வளர்க்கப்படுகின்றன. பார்ம்ஸ் ப்றைட் நிறுவனம் முழுமையான உற்பத்தி நடவடிக்கைகளுக்கு உயிரியல் விஞ்ஞான பாதுகாப்பு அளவீடுகளை மேற்கொண்டே அதியுயர் தரத்திலான உற்பத்திகளை சுகாதார ரீதியாக மேற்கொள்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57