சுதந்திரக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற விதம் தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழில் கருத்துத் தெரிவித்து அசத்தியுள்ளார் இந்திய அணியின் அதிரடி நாயகன் தினேஷ் கார்த்திக்.
பங்களாதேஷ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் இறுதி பந்தில் சிக்சர் அடித்து பார்வையாளர்களையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் தமிழர்களையும் குறிப்பாக இலங்கை ரசிகர்களையும் பிரமிக்க வைத்த தினேஷ் கார்த்திக், வெற்றிக்கான இறுதிப் பந்தை எதிர்கொண்ட அந்த நொடிகள் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தமிழர்கள் மிளிர்வதும், அவர்கள் ஊடகங்களில் தமிழில் பேசுவது, கேட்பது என்பது மிகவும் அபூர்வம் அந்தவகையில் அண்மையில் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் இலங்கையின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரசல் ஆர்னோல்ட் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான முரளி கார்த்திக்குடன் ஆடுகளம் தொடர்பில் தமிழில் வர்ணனையில் ஈடுபட்டிருந்தார்.
குறித்த காணொளி சர்வதேச கிரிக்கெட் மட்டுல்லாது உலக தமிழர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM