நெதர்லாந்தில் இருந்து வான் கடிதம் மூலம் 22 கிராம் கொக்கேயின் போதைப்பொருள் இலங்கைக்குக் கடத்தப்பட்டமை கொழும்பு, டி.ஆர். விஜயவர்தன மாவத்தையிலுள்ள மத்திய தபால் பரிவர்த்தனை சுங்க அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த போதைப்பொருளின் பெறுமதி 330,000 ரூபாவாகும்.

பொலிஸ் போதைப்பொருள் பணியகம் இதுதொடர்பாக தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.