ஹொங்கொங் நாட்டு உல்லாசப் பயணி ஒருவரை அச்சுறுத்தி அவரை நிர்வாணமாக்கி அவரது பணம், பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்ற நான்கு சந்தேக நபர்களை கண்டி குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தேடிவருகின்றனர்.

ஹொங்கொங் நாட்டிலிருந்து இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள இவர் கண்டிக்கு வந்த போது நான்கு நபர்கள் வழி காட்டிகள் போன்று இவருடன் நட்பு கொண்டு இவருக்கு ஓய்வு விடுதி ஒன்றில் தங்குவதற்கு வாடகை அறை ஒன்றினையும் அமர்த்திக் கொடுத்துள்ளனர்.

பின்னர் இவர்கள் உல்லாசப் பயணியுடன் அறையில் தங்கி அவரை அச்சுறுத்தி 700 டொலர் (98,700) பணமும் பல ஆயிரக்கணக்கான ரூபா பெறுதியான கைய டக்கத் தொலைபேசி மற்றும் உடமை களையும் கொள்ளையடித்துக் கொண்டு உல்லாசப் பயணியை தாக்கி நிர்வாணமாக்கி அடித்து கட்டி தொங்க வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக உல்லாசப் பயணி ஓகே வட்மோக்கி (வயது 55) கண்டிபொலிஸ் தலைமையகத்தில் முறைப் பாடு செய்துள்ளார்.

இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.