ஒருவகையான பறவையின் முட்டைகளை சேகரிக்கச் சென்ற நபரொருவர் குளத்தில் வீழந்து உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மதுரங்குளி பிரதேசத்தில் குளத்தில் வாழும் சில்லித்தார எனும் பறவையின் முட்டையினை உணவிற்காக சேகரிக்கச் செனற குடும்பஸ்தரே இவ்வாறு குளத்தில் கால் தவறி விழுந்து மரணமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 31 வயதுடைய விநாயகபுரம் வாழைச்சேனையைச் சேர்ந்த க.கனகலிங்கம் ஆவர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று ஆய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் பொலிசார் தெரிவித்தனர்.