விசித்திரமான உயிரினமொன்று தெஹிவளை கெம்பல்பிளேஸில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த உயினம் தொடர்பில் பிரதேச வாசியொருவர் அவதானித்த நிலையில் தெஹிவளையிலுள்ள மிருகக்காட்சி சாலை அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் அது தொடர்பில் மஹரகமயிலுள்ள மிருக வைத்தியசாலைக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த உயிரினம் தொடர்பில் பிரதேசவாசிகள் அங்கு அறிவித்துள்ளபோதிலும் இதுவரை குறித்த பிரதேசத்திலிருந்து உயிரினம் மீட்கப்படவில்லையென பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, மிட்கப்பட்ட உயிரினம் உயிருடன் உள்ளபோதிலும் அதற்குத் தேவையான உணவோ பராமரிப்போ அற்று குற்றுயிராகக் காணப்படுவதாகவும் கங்காரு மற்றும் நாயைப்போன்ற சாயலையுடையதாக உள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்தனர்.