உயர் கல்வியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

வேதன உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுக்கும் பணிப் புறக்கணிப்பு, இன்று 21 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

உயர் கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு இடையில் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் உப தலைவர் எட்வட் மல்வத்தகே கூறினார். 

எனினும் இன்றைய தினத்திற்குள் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வியமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் கூறியுள்ளது.