பெண் இனத்தை ஓரம் கட்­டிய காலம் மலை­யேறி விட்ட நிலையில் இன்று சகல துறை­க­ளிலும் பெண்கள் வர­லாற்று சாத­னை­களை படைத்து வரு­கின்­றனர். ஆணா­திக்கம் நிறைந்த சமூ­கத்தின் மத்­தியில் சாதிக்க துடிக்கும் பெண்கள் இன்று உல­கையே வலம் வந்­து­ கொண்­டி­ருப்­பது பெண் சமு­தா­யத்­தையே தழைத்­தோங்க செய்து விட்­டது என்­பதை படம்­ பி­டித்து காட்­டு­கின்றது.  எவ்­வ­ள­வு தான் திற­மை­களை வெளிக்காட்­டி­னாலும் பாது­காப்பு, உள நிலை, குடும்பம் உள்­ளிட்ட பல சமூக கார­ணி­களால் ஒரு கட்­டத்தில் தனக்­காக இல்­லா­வி­டினும் தன்னை சார்ந்­தோ­ருக்­காக அடக்­கப்­ப­டு­கின்­றனர்.

 

சமூ­கத்தின் மத்­தியில் பல்­வேறு சவால்­க­ளுக்கும் எதிர்ப்­புக­ளுக்கும் ஒவ்­வொரு பெண்ணும் விரும்­பியோ விரும்­பா­மலோ முகம் கொடுக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­ப­டு­கின்­றது. அந்­நி­லை தான் பல பெண்­க­ளது மறை­வுக்கு கார­ண­மா­கின்­றது. குறிப்­பாக தனது துணை­வர்­களால், நண்­பர்­களால், தனது உற­வு­களால் துன்­பங்கள், வேலை பார்க்கும் இடங்­களில் பாது­காப்­பின்மை, அதிக வேலைப்­பளு, அதிக சுமை போன்ற  பல்­வேறு கோணங்­களில் பெண்கள்  இன்று மர­ணத்தை எதிர்­பார்த்தோ எதிர்­பா­ரா­மலோ சந்­திக்­கின்­றனர். அந்த வகையில் எமது நாட்டின் பல்­வேறு ஆராய்ச்­சி­களின் படி பெண்­களில் இயற்­கைக்கு மாறான   மர­ணங்­களில் தற்­கொ­லையே அதி­க­ளவு காணப்­ப­டு­வ­தாக தக­வல்கள் வெளியா­கி­யுள்­ளன. 

இது தொடர்பில் வைத்­திய அதி­காரி சனத்­குமார் சதா­சிவம் தெரி­விக்­கையில், 

பெண்­களின் இயற்­கைக்கு மாறான மர­ணங்­க­ள் எனும் பட்டியலில் தற்­கொலை அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. குறிப்­பாக 25 வயது தொடக்கம் 60 வய­துக்­கி­டைப்­பட்­டோரே இவ்­வாறு அதி­க­மாக தற்­கொ­லையை முடி­வாக தேடிக் ­கொள்­கின்­றனர்.    மன­உ­ளைச்சல் , நிம்­மதி இன்மை, குடும்பத் தக­ராறு, உடல் நிலை­மையின் தாக்கம், மன அழுத்தம், அதிக எதிர்­பார்ப்பு, ஏமாற்றம், காதல் தோல்­விகள், துணை­வர்­களால் வன்­மு­றைகள் மற்றும் பாலியல் ரீதி­யான துன்­பு­றத்­தல்கள் என்­ப­வற்றை குறிப்­பி­டலாம். தொடர்ச்­சி­யாக ஒருவர் மன உளைச்­ச­லுக்­குள்­ளாகும் போது ஒரு நொடியின் தனக்குள் ஏற்­ப­டக் கூ­டிய ஒரு வகை ஆத்­திரம் என்று சொல்லக் கூடிய அதி­யுச்ச கோபத்தால் பிரச்­சி­னைக்கு தீர்­வாக தற்­கொ­லையை முடி­வாக தேடி ­கொள்­கின்­றனர். 

எனவே இத்­த­கையோர் உள­வியல் வைத்­திய அதி­காரி ஒரு­வ­ரி­டமோ அல்­லது விசேட ஆலோ­சனை வழங்கல் திணைக்­க­ளங்­க­ளி­லுள்ள அதி­கா­ரி­க­ளி­டமோ ஆலோ­ச­னைகள் பெறு­வ­த­னூ­டாக தற்­கொலை எனும் மன­நி­லை­யி­லி­ருந்து வெளிவர முடியும். தியானம்,யோகா­சனம் போன்ற உள ரீதி­யான மாற்­றங்­களை உண்­டு ­பண்ணக் கூடிய, தெளிவான சிந்­த­னை­களை பெறக்­கூடிய  விட­யங்­களை பாட­சாலை மட்­டத்­தி­லி­ருந்து கற்­ப­தற்கு ஆரம்­பிக்க வேண்டும். அதே­ச­மயம் பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு­போதும் தற்­கொலை தீர்­வாக அமை­யாது. அதேச­மயம் அதிக எதிர்­பார்ப்­புகள் எல்லா சந்­தர்ப்பங்­க­ளிலும் கைகூ­டாது என்­ப­த­னையும் மக்கள் நன்கு உணர வேண்டும் எனவும் தெரி­வித்தார். 

எமது நாட்டைப் பொறுத்த வரையில் 78.6 சத­வீ­த­மான பெண்கள் வன்­மு­றை­களால் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இது தொடர்பில் அண்­மையில் பால்­நிலை ரீதி­யான பார்­வையில் குறிப்­பாக துணை­வ­ரினால் நிகழும் வன்­மு­றை­களால் இயற்­கைக்கு மாறான மர­ணங்­க­ளுக்கு பங்­க­ளிக்கும் கார­ணிகள் தொடர்பில் அண்­மையில் இலங்­கையின் முத­லா­வது ஆய்வை ஐக்­கிய நாடுகள் சனத்­தொகை நிதியம் களனி பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைந்து மேற்­கொண்­டது.

இவ ஆய்வின் ஊடாக பெண்கள் மற்றும்  சிறு­மி­களின் இயற்­கைக்கு மாறான மர­ணங்கள் சம்­ப­விப்­ப­தற்­கான கார­ணங்கள் தொடர்பில் மேல், சப்­ர­க­முவ, கிழக்கு, தென், வட மத்­திய மாகா­ணங்­களில் மேற்­படி ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

2013 -முதல் 2015 ஆம் ஆண்டுக்­கிடைப்பட்ட காலப்பகுதியில் பொலிஸ் மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபர தகவல்­களைக் கொண்டு மேற்படி பெண்களின் இயற்கைக்கு மாறான  இறப்புக்களில் தற்கொலை தொடர்பில்  இலங்கையின் குறிப்பிட்ட 5 மாகாணங்­களுக்கிடையில் ஆய்வு செய்து மேற்கண்ட வரைபு சுட்டிக்காட்டுகின்றது. 

21 மில்­லியன் சனத்­தொகை கொண்ட எமது நாட்டில் ஆண்­டுக்கு 100,000 பெண்­களில் 7.1 வீத­மான இறப்­புக்கள் வீதி விபத்­துக்­க­ள், தற்­கொ­லை­­க­ள் மூலமாக இடம்பெறுவதாக கணிப்­பி­டப்­பட்­டுள்­ளன. அந்த வகையில் 25 வய­துக்கு கீழ்­ப்பட்ட பெண்­களில் சாலை விபத்­துக்­களால் 16 வீதமும், தற்­கொ­லை­களால் 40 வீதமும், கொலை­க­ளு­டாக 18 வீதமும், இயற்­கைக்கு மாறாக 30 வீத­மான இறப்­புக்­களும் ஏற்­ப­டு­கின்­றன. 25- --முதல் 60 வயது வரை­யான பெண்­களில் விபத்­துக்­களால்  47 வீதமும், தற்­கொ­லை­களால் 50 வீதமும், கொலை­க­ளு­டாக 59 வீதமும், இயற்­கைக்கு மாறாக 52 வீதமும் இறப்­புக்கள் ஏற்­ப­டு­கின்­றன. 

மேலும் 60 வய­துக்கு மேற்­பட்ட பெண்­களில் விபத்­துக்­களால் 37 வீதமும், தற்­கொ­லை­களால் 10 வீதமும்,  கொலை­க­ளூ­டாக 23 வீதமும், இயற்­கைக்கு மாறாக 23 வீதமும் இறப்­புக்கள் ஏற்­ப­டு­கின்­றன. எனவே மேற்­குறித்த இறப்­புக்­களுள் 25 வயது தொடக்கம் 60 வரை­யான பெண்­களே  அதிகளவு இயற்­கைக்கு மாறான உயி­ரா­பத்­துக்­களை  சந்­திக்­கின்­றனர். 

அதில்  தற்­கொலை ரீதி­யான இறப்பு சம்­ப­வங்­களே அதிகம் நிக­ழு­கின்­றன. குறிப்­பாக  வீட்டு வன்­முறை சம்­ப­வங்­களால் ஏற்­படக் கூடிய தற்­கொ­லை­களே  அதி­க­மா­க­வுள்­ளன. அதில் 14 வீதம் துணை­வர்­க­ளாலும், 10 வீதம் காதல் தோல்­வி­க­ளாலும், 11 வீதம் வீட்டு வன்­மு­றை­க­ளாலும், 6 வீதம் சொத்­துக்கள் தொடர்­பிலும் பெண்­களின் இயற்­கைக்கு மாறான இறப்பு சம்­ப­வங்­க­ளாக பதி­வா­கி­யுள்­ளன. 

கொலை சம்­ப­வங்­களை பொருத்­த­மட்டில் 2013ஆம் ஆண்டை காட்­டிலும், 2015ஆம் ஆண்டில் கிழக்கு மற்றும் தென் மாகா­ணங்­களில் அதி­க­மா­கவும்   தற்­கொலை சம்­ப­வங்­களை பொருத்­த­மட்டில் வட மாகா­ணத்தில் அதி­க­மா­கவும் நிகழ்­ந்துள்ளன. 

இது தொடர்பில் களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் மைத்ரி விக்­கி­ர­ம­சிங்க தெரி­விக்­கும் ­போது, 

தெற்­கா­சிய நாடு­களில்  பெண்கள் மற்றும் சிறு­மி­களின் இயற்­கைக்கு மாறான இறப்­புக்­களில் இந்­தியா 121ஆவது இடத்­திலும், பாகிஸ்தான் 67 ஆவது  இடத்­திலும், பூட்டான் 133ஆவது இடத்­திலும், பங்­க­ளாதேஷ் 137ஆவது இடத்­திலும் உள்­ளன.  

ஆனால் பல்­வகை கலா­சா­ரத்­தை­யு­டைய எமது நாடு பெண்­களின் இயற்­கைக்கு மாறான மர­ணங்கள் என்ற பட்­டி­யலுள் 131ஆவது இடத்தை வகிப்­பது பெண்­க­ளுக்­கெ­தி­ரான வன்­முறை இன்­னமும் ஒழிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தையே சுட்­டிக்­காட்­டு­கின்­றது என கூறி­யி­ருந்தார். 

இலங்­கையின் 2016ஆம் ஆண்­டுக்­கு­ரிய பொலிஸ் மற்றும் இலங்கை புள்­ளி­வி­பர திணைக்­க­ளத்தின் அறிக்­கை­யின்­படி விபத்­துக்­களால் ஆண்­டுக்கு ஒரு மில்­லியன் பேருக்கு 115 பேரும், தற்­கொ­லை­களால் 143 பேரும், கொலை சம்­ப­வங்­க­ளோடு 24 பேரும் உயி­ரி­ழப்­ப­தாக  தக­வல்கள் வெளியி­டப்­பட்­டுள்­ளன. 

எனவே மேற்­கு­றித்த புள்­ளி­வி­பர தக­வல்­க­ளூடாக பெண்­களின் இயற்­கைக்கு மாறான இறப்பு சம்­ப­வங்­களில் தற்­கொ­லையே அதி­க­ளவு தாக்கம் செலுத்­து­கின்­றமை புல­னா­கின்­றது. அதிலும் குறிப்­பாக வீட்டு வன்­மு­றை­களால் இடம்­பெறும் தற்­கொ­லை­களே அதி­க­ள­வாக உள்­ளன. கணவன் மனை­விக்­கி­டையில் தக­ராறு, குடும்ப உற­வு­க­ளோடு மனக்­க­சப்பு, பழி­வாங்கும் எண்ணம் போன்­ற­வற்றால் இன்று தற்­கொ­லையை முடி­வாக பெண்கள் தேடிக் ­கொள்­கின்­றனர். இத்­த­கைய சம்­ப­வங்­க­ளுக்­கான ஆரம்ப கட்டம் குறித்து ஆரா­யும் ­போது மேற்­கு­றித்­த­வா­றான சிறு சிறு பிரச்­சி­னை­களே அடித்­த­ள­மாக காணப்­ப­டு­கின்­றன. எனவே பெண்­க­ளுக்கு வெளியி­டங்­களில் மட்­டு­மன்றி தன்னை சார்ந்­தோ­ரி­னாலும் வன்­மு­றைகள் நாளுக்­குநாள் அதி­க­ரித்த வண்­ண­முள்­ளன. 

எனவே பெண்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றை­க­ளி­லி­ருந்து விடு­பட வேண்­டு­மாயின் ஆண் பெண் சமத்­துவம், விட்டுக்கொடுப்பு, தெளிவான சிந்­தனை போன்ற குணங்­களை எமக்குள் வள­ர்த்துக் கொள்ள வேண்டும். அத்­த­கைய பண்­பு­களை பாட­சாலை முதல் குடும்ப  மட்­டத்­தி­லி­ருந்து கட்­டி­யெ­ழுப்ப வேண்டும்.

ஆண்­டவன் படைப்பில் எமக்­கென கொடுத்த ஆற­றி­வி­னையும் உரி­ய­ விதத்தில் உரி­ய­வாறு எடுத்­து கொள்­ளு­மி­டத்து எம்­மத்­தி­யி­லுள்ள பல்­வே­று­பட்ட சர்ச்­சை­களும், சமூக சீர்­கே­டு­களும், பாரி­ய­ளவு குறைந்­து­விடும். தொழில்­நுட்­பத்­தோடு இணைந்த வாழ்க்கையில் சமூகம், சூழல் குறித்து சிந்திக்க பலரும் மறந்து விடுகின்றோம். இதனால்தான் விரோதங்களும் குரோதங்களும் பஞ்சமா பாதகங்களும் பாலியல் வன்முறை­களும், இனத் துவேஷங்களும் இப் பூமியில் தோகை விரித்து ஆடுகின்றன. 

எனவே மக்கள் மத்தியில் நிதானம், தெளிவு, விட்டுக்கொடுப்பு  என்பன வளர வேண்டும்.