நாவலப்பிட்டி கொத்மலை பிரதேச செயலகத்திற்கட்பட்ட படுகெதரயாய வனப்பகுதியில் சட்டவிரோதமாக பலா மரங்களை வெட்டி கும்பலொன்றை அப் பிரதேச கிராமசேவகர் மற்றும் நாவலப்பிட்டிய பொலிஸார் இணைந்து சுற்றுவளைத்த போது சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் வெட்டப்பட்ட பலாமரங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுற்றிவளைக்கப்பட்டபோது தப்பியோடிய சந்தேக நபர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.