கொரியா எக்ஸிம் வங்கி இலங்கைக்கு நிதி உதவி!!!

Published By: Digital Desk 7

19 Mar, 2018 | 11:26 AM
image

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொரியா 785.07 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக கொரிய எக்ஸிம் வங்கியின் இலங்கைக்கான  பிரதம வதவிட பிரதிநிதி சங்சூ ஜங்  தெரிவித்துள்ளார்.

கொரியாவினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கொரிய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் ஏற்கனவே கொரிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரியாவின் எக்ஸிம் வங்கியானது இலங்கையில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென 785.07 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை ஒதுக்கியுள்ளது.

இந்நிதியில் 385 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் போக்குவரத்து துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளும், 205 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நீர் வழங்கல் மற்றும் கழிவு முகாமைத்துவ அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. 

கொரிய நிதி மற்றும் மூலோபாய அமைச்சின் கீழ் இயங்கும் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் ஊடாக அபிவிருத்தி நடவடிக்ககைள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு தேவையான கடன்களை வழங்குதல் மற்றும் இலங்கையின் சர்வதேச வர்த்தக, முதலீட்டு நடவடிக்கைகளுக்கான நிதி ரீதியான வழங்குனராக தொழிற்படல் ஆகிய இரு பிரதான தொழிற்பாட்டு நடவடிக்கைகளை கொரிய எக்ஸிம் வங்கி மேற்கொள்ளவுள்ளது.

கொரிய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான மூலோபாய புரிந்துணர்வு கட்டமைப்பு மூலம் இனங்காணப்பட்ட துறைகளான கல்வி, போக்குவரத்து, நீர் வழங்கல் முகாமைத்துவம், கழிவு முகாமைத்துவம் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களின் அபிவிருத்தி என்பன தொடர்பில் பிரதான கவனம் செலுத்தப்படவுள்ளது. மேற்குறித்த ஒழுங்கின்படி கொரிய நிதி மூலம் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. 

கொரிய எக்ஸிம் வங்கியானது பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் ஊடாக கொழும்பு - காலி வீதி அபிவிருத்திக்காக 1990 இல் முதன்முதலில் நிதி ஒதுக்கீடு செய்தது.

அதன் தொடச்சியாக தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள 29 அபிவிருத்தி திட்டங்களுக்காக 785.07 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதியுதவி வழங்குவதற்கு தகுதியடைந்த 54 நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது. அத்தோடு 1978 ஆம் ஆண்டிலிருந்து 386 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கை மற்றும் கொரிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக, முதலீட்டு நடவடிக்கைகளுக்காக கொரிய எக்ஸிம் வங்கியினால் ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை மற்றும் கொரியாவிற்கு இடையிலான மூலோபாய தொடர்புகளின் 40 ஆவது வருட நிறைவையொட்டி கொரியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது, கொரிய பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தினால் வழங்கப்படும் நிதியினை 2017 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் 300 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08