கம்பளை - மரியாவத்தை பகுதியில் பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஒரு பெண் உட்பட 8 சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜெய சாந்த தலைமையிலான குழுவொன்று நேற்று காலை 11 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த 8 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து ஒரு தொகை கஞ்சாவும் ஏனைய எழுவரிடமிருந்து ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்களும் 110,000 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் இன்று  கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.