ஐக்­கிய நாடு­களின் பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தற்கு 2019 ஆம் ஆண்டு  மார்ச் மாதம்­வரை  கால அவ­காசம் இருக்­கின்­றது. அதனை அரசாங்கம் நிறை­வேற்­றாது விட்டால், அடுத்த கட்டத்தை முன்னெடுக்க நாங்கள் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு பரி­பூ­ர­ண­மாக ஒத்­து­ழைப்பை கொடுத்­துள்ளோம். அவர்கள் என்ன செய்­யப்­போ­கின்­றார்கள் என்று சொல்ல வேண்டும். 

நாங்கள் அதனை அறிய வேண்டும். எமது மக்­களை சர்­வ­தேச சமூகம் கைவிட முடி­யாது என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன்  தெரி­வித்தார்.  

இலங்­கையின் முத­லா­வது தமிழ் எதிர்க்­கட்சித் தலை­வரும், நாட­றிந்த தலை­வ­ரு­மான அமரர் அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்தின் திரு­வு­ருவச் சிலை திறப்­பு­விழா நேற்று வலி­மேற்கு பிர­தேச சபை முன்­றலில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஈ.சர­வ­ண­பவன் தலை­மையில் நடை­பெற்­றது. இந் நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஜனா­தி­ப­திக்கு மக்­களால் வழங்­கப்­பட்ட ஆணை  நிறை­வேற்­றப்­பட வேண்டும்.  எமது ஆயுத போராட்­டத்தை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு சர்­வ­தேச சமூகம் இலங்கை அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யது. ஏனென்றால் இலங்கை அர­சாங்கம்  நாங்கள் ஒரு தீர்வைக் காணுவோம். ஒரு தீர்வை கொடுப்போம் எனக் கூறி­னார்கள். ஆனால் தீர்வு இன்னும் வர­வில்லை. இன்று சர்­வ­தேச சமூகம் முழு­மை­யாக எங்­க­ளுடன் நிற்­கி­றது. பிராந்­திய வல்­ல­ரசு எங்­க­ளுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று உறு­தி­யாக நிற்­கின்­றது. பல நாடுகள் பல பிராந்­தி­யங்­களும் எங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றன. ஆனால் அனை­வரும் ஒன்­று­கூடி தமிழ் மக்­க­ளுக்கு நியாயம் வழங்க வேண்டும். 

இலங்கை -  இந்­திய ஒப்­பந்­தத்தை  கைச்­சாத்­திட்ட பின்னர் 13 ஆம் திருத்தச் சட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. நாம் கேட்­டுக்­கொண்­டது அது­வல்ல. ஆனாலும் முதல் முறை­யாக அதி­காரப் பகிர்வு மாகா­ணங்­களின் அடிப்­ப­டையில் அர­சியல் சாச­னத்தில் சேர்த்துக் கொள்­ளப்­பட்­டது. அதற்கு முன்­ப­தாக அதி­காரப் பகிர்வு ஒரு­போதும் சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை. இதனை எங்­க­ளு­டைய பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்­வாக ஏற்­றுக்­கொள்ள மறுத்­து­விட்டோம். அது நிரந்­த­ர­மான தீர்­வல்ல. நிரந்­த­ர­மான தீர்வு இல்­லாமல் இருந்­தா­லும்­கூட ஒரு கணி­ச­மான முன்­னேற்­ற­மாக இருந்­தது. 

இன்­றைக்கும் அதனை நிரந்­த­ர­மா­ன­தாக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இது இன்னும் மேலோங்கிச் செல்ல வேண்டும். பல கரு­மங்கள் திருத்­தப்­பட வேண்டும். 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் பல கரு­மங்கள் நாட்டில் நடை­பெற்று வரு­கின்­றன. தற்­பொ­ழுதும் இடம்­பெற்று வரு­கின்­றது. 

அண்ணன் அமிர்­த­லிங்­கத்தின் தலை­மையின் கீழ் அவ­ரு­டைய வழி­ந­டத்­தலின் கீழ் தந்தை செல்­வா­வினால் வகுக்­கப்­பட்ட கொள்­கை­யின்­படி நாங்கள் செய்து வரு­கின்ற காரி­யங்கள் பற்றி அனை­வரும் புரிந்­து­கொள்ள வேண்டும், அறிந்­து­கொள்ள வேண்டும்.  

 கடந்த காலங்­களில் இடம்­பெற்­று­வந்த போராட்­டங்­களில் ஏற்­பட்ட தவ­று­களை நாங்கள் சிந்­திக்க வேண்­டி­யது எங்­க­ளு­டைய கடமை. தந்தை செல்வா பண்­டா­ரா­நா­யக்கா ஒப்­பந்தம், டட்லி செல்வா ஒப்­பந்தம் மற்றும் சமஷ்டி கோரிக்­கையை நாங்கள் முன்­வைத்­த­போதும்  எங்கள் இனத்தில் உள்­ள­வர்கள் எதிர்த்­தார்கள். மக்­களைச் சார்ந்து நிற்­கின்ற கட்சி கொள்­கை­களை முன்­வைக்­கின்­ற­போது அதை அதே இனத்தைச் சார்ந்த இன்னும் ஒரு கட்சி அல்­லது இன்­னு­மொரு தலை­மைத்­துவம் எதிர்க்­கு­மாக இருந்தால் அந்த கோரிக்கை சம்­பந்­த­மாக ஏற்­ப­டு­கின்ற பல­வீ­னத்தை நாங்கள் புரிந்­கொள்ள வேண்டும். 

பண்­டா­ர­நா­யக்க- தந்தை செல்வா ஒப்­பந்தம் டட்லி - செல்வா ஒப்­பந்தம் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.  இவற்றை எதிர்த்த நிமித்தம் எமது கோரிக்கை எந்­த­ள­வுக்கு பல­வீனம் அடைந்­தது என்­ப­தனை புரிந்­து­கொள்­ள­வேண்டும்.   அதன் மூல­மாக அதனை நிறை­வேற்­றாமல் இருப்­ப­தற்கு நாங்கள் அளித்த சந்­தர்ப்­பத்தை பற்றி சிந்­திக்க வேண்­டிய கட­மைப்­பாடு இருக்­கி­றது. இத்­த­கைய எதிர்ப்பின் மூலம் எதனைச் சாதித்­தார்கள். தமிழ் மக்­க­ளுடை ஆத­ரவை ஓர­ளவு பெற்­றார்கள். ஆனால் பெற வேண்­டிய வற்­றுக்கு தடை­யாக இருந்­தார்கள். அந்த நிலமை தொட­ரக்­கூ­டாது. அந்த நிலமை தொடர்ந்தால் பல இழப்­புக்­களை சந்­திக்க வேண்­டிய நிலமை ஏற்­படும். 

ஒரு­மித்த நாட்­டுக்குள் பிள­வு­ப­டாத நாட்­டுக்குள் பிள­வு­ப­டுத்த முடி­யாத நாட்­டுக்குள் எமது உள்­ளக சுய­நிர்­ணய அடிப்­ப­டையில், எமது இறை­யாண்­மையின் அடிப்­ப­டையில் அதி­யுச்ச அதி­காரப் பகிர்வு நாங்கள் சரித்­தி­ர­ரீ­தி­யாக வாழ்ந்து வந்த பிர­தே­சத்தில் எங்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும் என்று நாங்கள் கேட்­கின்றோம். அதுதான் எமது கொள்கை. இதுதான் எமது நிலைப்­பாடு. இதனை எல்­லோரும் ஏற்றுக் கொள்­கி­றார்கள். எவரும் இதனை மறுக்­க­வில்லை. ஒரு காலத்தில் தமி­ழீழம் தான் நிலைப்­பாடு என்று கூயி­ய­வர்­கள்­கூட இன்று இதனை ஏற்றுக் கொள்­கின்­றார்கள். இதனை நாங்கள் முன்­னெ­டுக்க வேணடும்.

தற்­போது சர்­வ­தே­சத்தின்  முழு­மை­யான ஆத­ரவு எங்­க­ளுக்கு இருக்­கி­றுது. 2012 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள்  மனித உரிமைப் பேர­வையில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் 2013, 2014, 2015   தீர்­மானம்  ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது மாத்­தி­ர­மன்றி இலங்கை அர­சாங்­கமும் ஏற்­றுக்­கொண்­டது. இணை அனு­ச­ர­ணை­யா­ளர்­க­ளாக இருந்து ஏற்­றுக்­கொண்­டார்கள். அந்தத் தீர்­மானம் 2017 ஆம் ஆண்டு மீண்டும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அந்தத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட வேண்டும். அதில் நாங்கள் உறு­தி­யாக  இருக்­கின்றோம். அதில் எங்­க­ளு­டைய சகல சரு­மங்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. ஆன­ப­டி­யினால் அதனை நிறை­வேற்ற வேண்டும் என்று நாங்கள் வலி­யு­றுத்த வேண்டும். அதனை நிறை­வேற்­று­வ­தற்கு 2019 ஆம் ஆண்டு , பங்­கு­னி­மா­தம்­வரை கால அவ­காசம் இருக்­கின்­றது. அதனை நிறை­வேற்­றாது விட்டால், நாங்கள் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு பரி­பூ­ர­ண­மாக ஒத்­து­ழைப்பை கொடுத்­துள்ளோம். அவர்கள் என்ன செய்­யப்­போ­கின்­றார்கள் என்று சொல்ல வேண்டும். நாங்கள் அதனை அறிய வேண்டும். எமது மக்­களை சர்­வ­தேச சமூகம் கைவிட முடி­யாது. நாங்கள் தனி ஈழத்தைக் கேட்டோம். கைவிட்டு விட்டோம். 30 வருட கால­மாக இளை­ஞர்கள் ஆயு­மெ­டுத்துப் போரா­டி­னார்கள். அது முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. ஆனால் 30 வரு­டக கால­மாக தமிழ் இளை­ஞர்கள் அந்த போராட்­டத்தை நடத்­தி­னார்கள். மண்ணில், கடலில், ஆகா­யத்தில் நடத்­தி­னார்கள். அது முடி­வுக்கு வந்­துள்­ளது. எதற்­காக போராட்­டங்கள் நடத்­தினோம். மக்­களின் நீதிக்­காக நியா­யத்­திற்­கு­காக. சர்வ தேச ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் நாங்கள் பெற­வேண்­டி­யதை பெறு­வ­தற்­காக ஐக்­கிய நாடுகள் சபையில் உள்ள சர்­வ­தேச பிர­க­டனம் எம்மை ஆட்சி புரி­வ­த­றகு ஒரு அர­சாங்­கத்­துக்கு எமது சம்­மதம் இருக்க வேண்டும். எமது இணக்­கப்­பாடு இருக்க வேண்டும். 1956 முதல் இற்றை வரை சமஷ்டி முறையில் இறை­மையின் அடிப்­ப­டையில் நாங்கள் வாழ்ந்­து­வந்த பிர­தேங்­களில் சுய­நிர்ண உரி­மையை கேட்­கின்றோம். இது சர்­வ­தேச சட்­டத்­தின்­படி எமது உரிமை உரித்து. சிவில் அர­சியல் சம்­பந்­த­மாக சர்­வ­தேச ஒப்­பந்தம், பொரு­ளா­தார சமூக கலாச்­சார விட­யங்கள் சம்ந்­த­மான சர்தே ஒப்­பந்தம் ஆகும். இந்த ஒப்­பந்­தத்தின் படி ஒரு மக்கள் குழா­முக்கு உள்­ளக சுய­நிர்­ணய உரி­மைக்கு உரித்­துண்டு. இதனை எவரும் முற்க முடி­யாது. அவ்­வி­த­மான உள்­ளக சுய­நிர்­ணய உரிமை அந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டாது விட்டால் அவர்கள் அதில் இருந்து வெ ளியேற வேண்­டிய உரித்­துண்டு. இதைத்தான் நாங்கள் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு தெரி­விக்­கின்றோம். இவற்­றுக்­காகத் தான் தந்தை செல்­வ­நாகம், அண்ணன் அமிர்­த­லிங்கம் போரா­டி­னார்கள். ஒரு அடிப்­படை இல்­லாமல் நாங்கள் போரா­ட­வில்லை. 13 ஆம் திருத்தச் சட்டம் நிறை­வேற்ப்­பட்ட பிறகு ஆட்சி செய்த ஜனா­தி­பதி பிரே­ம­தாசா, சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க, பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்க காலத்தில், மஹிந்த ராஜ­பக்ஷ காலத்தில் பல்­வேறு கரு­மங்கள் நடை­பெற்­று­வந்­துள்­ளன. இதற்கு மேல­தி­க­மாக இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனா தலை­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்க தலை­மையில் பல கரு­மங்கள் நடை­பெற்­றுள்­ளன. நடை­பெற்­று­வ­ரு­கின்­றன. அவர்­க­ளுக்கு ஆணை 2015 ஆம் ஆண்டு தை மாதத்­திலும், ஆவணி மாதத்­திலும் வழங்­கப்­பட்­டுள்­ளது. தேசியப் பிரச்­சி­னைக்கு ஒரு தீர்­வைக்­காணும் முக­மாக இது வழங்­கப்­பட்­டுள்­ளது. இதனை அவர்கள் காண வேண்டும். அந்த ஆணை நிறை­வேற்­றப்­பட வேண்டும். இதனைச் செய்­யாது விட்டால் ஆயுதப் போராட்­டத்­துக்கு வழி­வ­குக்­கக்­கூ­டாது. சர்­வ­தேச சமூ­கத்­தி­னு­டைய அனு­ச­ரணை கிடைக்க வேண்டும். எமது ஆயுத போராட்­டத்தை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு சர்­வ­தேச சமூகம் இலங்கை அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யது. ஏனென்றால் இலங்கை அர­சாங்கம்  நாங்கள் ஒரு தீர்வைக் காணுவோம். ஒரு தீர்வை கொடுப்போம் எனக் கூறி­னார்கள். ஆனால் தீர்வு இன்னும் வர­வில்லை. இன்று சர்­வ­தேச சமூகம் முழு­மை­யாக எங்­க­ளுடன் நிற்­கி­றது. பிராந்­திய வல்­ல­ரசு எங்­க­ளுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று உறு­தி­யாக நிற்­கின்­றது. பல நாடுகள் பல பிராந்­தி­யங்­களும் எங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றது. ஆனால் இவை அனை­வரும் ஒன்­று­கூடி தமிழ் மக்­க­ளுக்கு நியாயம் வழங்க வேண்டும். அதுதான் எங்­க­ளு­டைய கோட்­பாடு. இதுதான் எமது கோரிக்கை. இதில் நாங்கள் ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும். நாங்கள் பிரிந்து நிற்க முடி­யாது. இதில் நாங்கள் வெற்­றி­பெற வேண்டும் என்றால் எமது மக்கள் ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும். பல்­வேறு கட்­சிகள் பல்­வேறு கருத்­துக்­களைக் கூறிக்­கொண்டு பல்­வேறு திசை­களில் சென்றால் நாங்கள் எமது குறிக்­கோளை நோக்கி பய­ணிக்க முடி­யாது.

எமது மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் முடி­வுக்கு வர­வேண்டும். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு மற்றும் அடிப்படைத் தேவைகள் மேலும் அரசியல் கைதிகள் விவகாரம் காணாமற்போனோர், காணிப் பிரச்சினைகள், மீள்குடியேற்றம் இவை முடிவுக்கு வர வேண்டும். ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும் அரசாங்கம் சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறவேண்டும். தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகளை, அநியாயங்களை சிங்கள மக்கள் மத்தியில் துணிவாகக் கூறவேண்டும். இதனைக்கூறி தமிழ் மக்களுக்கு நீதி, நியாயம் வழங்க வேண்டியது அவர்களுடை கடமை. அதிலிருந்து தவறமுடியாது. தவறுமேயானால் சர்வதேச சமூகத்திற்கு பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றோம். சில ஒப்பந்தங்களை கொடுத்துள்ளோம். அதன் காரணமாக பல விளைவுகள் ஏற்படலாம். தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சிங்கள மக்களுக்கு தெ ளிவு படுத்தவேண்டும். இந்தத் தெ ளிவின் மூலம், நாங்கள் எமது ஒற்றுமையின் மூலம் ஒருமித்து செயற்படுவதன் மூலம் நாமும் உறுதியான ஆதரவை கொடுத்து இக் கருமத்தை செயற்படுத்துவதற்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.