சுதந்திரக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 167 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி நிர்ணயித்துள்ளது.

சுதந்திரக் கிண்ணத் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்குபற்றி விளையாடின. இதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுபபொடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.