எம்.எம்.மின்ஹாஜ்

தமது ஊழல்மோசடி மறைப்பதற்காகவும் தமது பாவங்களை போக்குவதற்காக கூட்டு எதிர்க்கட்சியினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முனைகின்றது. இதன்படி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அதனை தோற்கடித்து விட்டு பாரிய வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Image result for அகில விராஜ் காரியவசம் virakesari

அத்துடன் சுதந்திரக் கட்சியினரும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கவே முனைவர். என்றாலும் அதற்கு மீறி சுதந்திரக் கட்சியினர் வாக்களித்தால் வாக்களிப்பர்கள் யார் என்பதனை பார்த்து அதன்பின்னர் தீர்மானம் எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.