உடல் பருமன் அறுவை சிகிச்சை மூலம் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? உடல் பருமனைக் குறைத்தல் எப்படி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது? சர்க்கரை நோய் வருவதற்கு இன்சுலின் சுரக்காதது காரணம் அல்ல. இன்சுலின் வேலை செய்யும் தன்மை குறைவாக இருப்பதே (Insulin Resistance) காரணம். இரைப்பை, குடல் பகுதிகளில் அறுவை சிக்சசை செய்வதன் மூலம் இன்சுலின் வேலை செய்யும் தன்மையை அதிகரிக்க முடியும். குடல் மற்றும் இரைப்பை பகுதிகளில் இன்சுலினை சிறப்பாக வேலை செய்யத் தூண்டும் ஹோர்மோன்கள் (GLP-1. GIP, PYY) சுரக்கின்றன. அறுவை சிகிச்சை மூலம் metabloism மாற்றி அமைக்கப்பட்டு, இந்தச் சுரப்பிகள் இன்சுலினின் வேலை செய்யும் தன்மையை அதிகரிக்கின்றன.

இதன் மூலம் சர்க்கரை கட்டுக்குள் வருகிறது. அதுசரி... இந்த அறுவை சிகிச்சை முறை எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? கோவை ஜெம் மருத்துவமனையின் உடல்பருமன் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டொக்டர் பிரவீன்ராஜ் அதுகுறித்து விளக்குகிறார். “1995இல் போரிஸ் என்ற அமெரிக்க மருத்துவர் ஒபிசிட்டி அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் மெடிக்கல் ரிப்போர்ட்களை ஆராய்ந்த போது, சிகிச்சைக்கு முன்னர் சர்க்கரை நோய் இருந்தவர்களுக்கு, அது இல்லாமல் போனது தெரிய வந்தது. மேற்கொண்டு ஆராய்ச்சி நடத்தியபோது, ஒபிசிட்டிக்கான அறுவை சிகிச்சை உடல் எடையைக் குறைப்பது மட்டும் அல்லாமல், இன்சுலின் வேலை செய்யும் தன்மையையும் அதிகரிக்கிறது என்று தெரிய வந்தது.

இன்சுலின் வேலை செய்யும் தன்மை குறை தான் சர்க்கரை நோய்க்கு காரணம். உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இதை சரி செய்ய முடியும்.

இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக அமெரிக்க டயாபடிக் அசோசியேசன் சில விதிமுறைகளை வகுத்தது. பாடிமாஸ் இன்டெக்ஸ் எனப்படும் பி.எம்.ஐ 30-க்கும் மேல் இருந்து சர்க்கரை நோயுடன் இருப்பவர்களும், பி.எம்.ஐ 27க்கும் மேல் இருந்து சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாமல் இருப்பவர்களும் இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி இருக்கிறது.’என்று விரிவாக விளக்கம் அளித்தார்.

கோவை ஜெம் மருத்துவமனையில் முதல் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையை 2002-ஆம் ஆண்டு செய்திருக்கிறார் ஜெம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டொக்டர் சி.பழனிவேலு “அந்த அறுவை சிகிச்சையை செய்ய எனக்கு ஊக்கம் கொடுத்தது ஒரு டொக்டர் தான். அப்போது குடல்நோய் தொடர்பான அறுவை சிகிச்சைகள் மட்டுமே ஜெம் மருத்துவமனையில் செய்யப்பட்டு வந்தன. நானும் அதில்தான் ஈடுபட்டு வந்தேன். அப்போதுதான் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த அந்த மருத்துவர். ஜெம் மருத்துவமனைக்கு வந்தார். பேரியாட் ரிக் அறுவை சிகிச்சை செய்ய என்னை ஊக்கப்படுத்தினார். அந்த அறுவை சிகிச்சை மூலம் அவரின் வாழ்க்கையே மாறியதைக் கண்டேன். 

அதன் பிறகு உடல் பருமன் அறுவை சிகிச்சை களைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். அதற்கென தனித் துறையே ஜெம் மருத்துவமனையில் உரு வானது” என்று முன் கதை சொல்கிறார் டொக்டர் சி.பழனிவேலு. 

இப்போது உடல் பருமன் அறுவை சிகிச்சைக்கு என்றே தனித்துறை ஜெம் மருத்துவமனையில் இயங்கி வருவதும், அத்துறையின் தலைவர் டொக்டர் பிரவீன் ராஜ் மற்றும் குழுவினரின் மூலம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்து முடிந்துள்ளதும் இங்கே குறிப்பிட வேண்டிய விடயம். 

ஜெம் மருத்துவமனையில் Holistic Approach எனப்படும் முழுமையான அணுகுமுறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதாவது அறுவை சிகிச்சை அளிப்பதோடு, நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு, உடற்பயிற்சி முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் இவ்வகையினதான சத்திர சிகிச்சைக்கு பின்னரும் நோயாளிகள் எவ்வகையினதான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிப்பதுடன் அவர்களை தொடர் கண்காணிப்பிற்கும் உட்படுத்துகிறார்கள். அவர்களின் மனநிலையை சமநிலைக்குக் கொண்டு வருவதற்கும் கவுன்சிலிங் அளிக்கப் படுகிறது. அதற்காகவே ஜெம் மருத்துவ மனையில் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்ட குழு நோயாளிகளுக்கு உதவக் காத்திருக்கிறது. உடல் பருமன் தொடர்பான சகலவிதமான பிரச்சினைகளுக்கும், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பது நிச்சயம். மேலதிக விபரங்களுக்கு: 

0422-2325125, செல்: (0)7397033533, 9003688222 

                  தொகுப்பு:  திவ்யா.