சுகா­தார சேவை பணிப்­பாளர் நாய­கத்தின் அனு­ம­தி­யின்றி, நோய்கள் பல­வற்­றுக்கு சிறந்த ஒள­ட­த­மென்று கூறி, தேயிலை விளம்­பரம் செய்த நிறு­வ­ன­மொன்றின் பிர­தி­நி­திக்கு, மொன­ரா­கலை  நீதி­மன்ற நீதி­பதி, கடு­மை­யான எச்­ச­ரிக்­கை­யினை விடுத்­த­துடன், ஆறா­யிரம் ரூபா அப­ரா­தத்­தையும் விதித்­துள்ளார். 

மொன­ரா­கலை மஜிஸ்ரேட் நீதி­மன்­றத்தில்  கடந்த வெள்ளியன்று மேற்­படி வழக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இவ்­வ­ழக்கை விசா­ரணை செய்த நீதி­பதி சமீர பிரசாத் தொடங்­கொட, பெருந்­தோட்ட  நிறு­வ­ன­மொன்றின் பிர­தி­நி­தியை குற்­ற­வா­ளி­யாகக் கண்டு, அவ­ருக்கு மேற்­படி எச்­ச­ரிக்­கையும், அப­ரா­தமும் விதித்தார். 

பெருந்­தோட்ட நிறு­வ­ன­மொன்றின் பிர­தி­நிதி, உள்­ளூரில் தயா­ரிக்­கப்­பட்ட சிறந்த ரக தேயி­லையை விற்­பனை செய்யும் பொருட்டு, நோய்கள் பல­வற்றைக் குறிப்­பிட்டு, அந் நோய்­களை சுக­மாக்க சிறந்த ஒள­ட­த­மாக இத் தேயி­லையைப் பாவிக்­க­லா­மென்று, ஊட­கங்­களில் விளம்­ப­ர­மொன்­றினை பிர­சு­ரிக்கச் செய்­தி­ருந்தார். நோய்கள் பல­வற்றைத் தீர்க்க இத் தேயிலை சிறந்த ஒள­ட­த­மென்று, சுகா­தார சேவை பணிப்­பாளர் நாய­கத்தின் அனு­மதி பெறா­ம­லேயே, தேயிலை தொடர்­பான  இவ் விளம்­பரம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. 

இதை­ய­டுத்து, படல்­கும்­பரை பொது சுகா­தாரப் பரி­சோ­தகர் பி. கோபிராஜ், மொன­ரா­கலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில், வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார். அவ்வழக்கு விசாரணை இறுதியிலேயே, நீதிபதி மேற்படித் தீர்ப்பினை வழங்கினார்.