சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னாரில் விழிர்ப்புணர்வு ஊர்வலம்!!!

Published By: Digital Desk 7

17 Mar, 2018 | 04:09 PM
image

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில்  இன்று  காலை  சர்வதேச  பெண்கள் தின விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட வளர் பிரை பெண்கள் திட்ட பொறுப்பதிகாரி ரி.மேரி பிரியங்கா தலைமையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் ஆரம்பமான குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பனங்கட்டுக்கொட்டு சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தை சென்றடைந்தது.

குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு  பிரச்சினைகள் தொடர்பில் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டிருந்தனர்.

ஊர்வலத்தை தொடர்ந்து மன்னார் பனங்கட்டுக்கொட்டு சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நிகழ்வு இடம் பெற்றது. 

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் நகர உதவி பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு  இயக்கத்தின் பெண்கள் திட்ட இணைப்பாளர் திருமதி லவினா, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் அன்றனி ஜேசுதாசன், மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் பெனடிற் குரூஸ் மற்றும் மாதர் கிராம அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08