அமெரிக்காவில் 26 வயதான தன் சொந்த மகளையே திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக் கொண்டதை அடுத்து 45 வயதான தாய்க்கு  இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஓரின சேர்க்கைத் திருமணம் சட்டப்பூர்வமானது என்று அறிவிக்கப்பட்ட பின் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம்  தாயும் மகளும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

உறவினர்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாடடைத் தொடர்ந்து தாயை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணையில் மகளை திருமணம் செய்வதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு 18 வயதான  தன் மகனையும்  திருமணம் செய்து கொண்டமை தெரிய வந்துள்ளது. 

அதன் போதும் உறவினர்களால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து  பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 2010ஆம் ஆண்டு  குறித்த திருமணம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் தாய் தனது குற்றங்களை ஒத்துக் கொண்டமையால் வழங்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு 8 ஆண்டுகள் நன்னடத்தை காலமும் அவர் அனுபவிக்க வேண்டும்.

மேலும் தண்டனையில் இருந்து வெளிவரும் போது, தாம் ஒரு பாலியல் குற்றவாளி என்பதையும் அவர் பதிவு செய்ய வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க விதிகளின்படி, நெருக்கமான உறவில் திருமணம் செய்து கொள்வது முறையற்றதாகும்.