கண்டி வன்முறை தொடர்பில் கைது செய்த பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரையும் எதிர் வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உட்பட 10 பேர் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கண்டியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு நீதி மன்றில் ஆஜர் படுத்திய போதே நீதிபதி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.