சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து துபாய் நாட்டிற்கு வல்லப்பட்டைகளை கடத்திச் செல்ல முயற்சித்த நபர் ஒருவர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதான கொழும்பில் வசித்து வரும் வர்த்தகராவார்

குறித்த வர்த்தகர் தனது பயணப் பையினுள் மறைத்து வைத்திருந்த 1,400,000 ரூபாய் பெறுமதியான 25 கிலோவிற்கும் அதிகமான வல்லப்பட்டைகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சட்டவிரோத கடத்தல் முயற்சி தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினரும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டைகளை அரசுடமையாக்கியதோடு குறித்த வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் விபுல மினுவன் பிடிய தெரிவித்தார்