மணமகனின் தாடியால் தாமதமான திருமணம்!!!

Published By: Digital Desk 7

17 Mar, 2018 | 12:42 PM
image

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலம் கந்தவா பகுதியில் மணமகன் தாடியை எடுத்துவிட்டு வந்தால் தான் திருமணம் செய்து வைப்போம் என பெண் வீட்டார் கூறிய சம்பவம் நடந்துள்ளது.

குறித்த பகுதியில் மங்கல் சவுகான் என்பவருக்கும் ரூபாலி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது.

முகூர்த்த நேரத்தில் மணமகன் தாடி வைத்து கொண்டு வந்து உள்ளார். ஆனால் மணமகள் வீட்டாருக்கு  மணமகனின் தாடி பிடிக்கவில்லை  இதனால்  தாடியை எடுத்துவிட்டு வந்தால் தான் பெண்ணை திருமணம் செய்து வைப்போம் என மணமகள் வீட்டார் கூறியுள்ளனர். 

ஆனால் சவுகான்கான் தாடியை எடுக்க மறுப்பு தெரிவித்து பிடிவாதம் பிடித்துள்ளார். இதனால் 12 மணிநேரம் திருமணம் பாதிக்கப்பட்ட நிலையில், பொலிஸாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்  மணமகனை சமாதானப்படுத்தி தாடியை எடுக்க வைத்துள்ளனர்.

அதன் பின்னர் மணமகள் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவே திருமணம் நடந்து முடிந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்