(தமி­ழ­கத்­தி­லி­ருந்து ஆர்.ராம்)

முஸ்­லிம்­களை மைய­மாக வைத்து  அண்­மை­யில்­ இ­டம்பெற்ற வன்­முறை சம்­ப­வங்­களை கண்­டிக்கும் வகை­யிலும் அதற்கு நீதி­கோ­ரியும் சென்­னையிலுள்ள இலங்கைத் தூத­ர­கத்­தை முற்­று­கை­யிடும் போராட்டம் இன்று சனிக்கிழமை இடம்­பெ­ற­வுள்­ளது. 

சீமான் தலை­மை­யி­லான நாம் தமிழர் கட்­சி­யி­ன­ரும் தி.வேல்­மு­ருகன் தலை­மை­யி­லான தமி­ழக வாழ்­வு­ரிமைக் கட்­சி­யி­னரும் கூட்­டாக இணைந்து ஏற்­பாடு செய்­துள்­ள இப்­போ­ராட்­டத்தில் இலங்கை உணர்வா­ளர்கள் அனை­வ­ரையும் பங்­கெ­டுக்­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

இப் ­போ­ராட்டம் சம்­பந்­த­மாக தமி­ழக வாழ்­வு­ரிமைக் கட்­சியின் தலைவர் தி.வேல்­மு­ருகன் ''கேச­ரி''க்கு தெரி­விக்­கை­யில், 

இலங்­கையில் நடை­பெற்ற யுத்தம் கார­ண­மாக ஏற்­க­னவே எமது உற­வுகள் சிதைக்­கப்­பட்­டுள்­ளனர். பாதிக்­கப்­பட்ட அவர்­க­ளுக்­காக நீதிகோரி போராட்­டங்­க­ளையும் அழுத்­தங்­க­ளையும் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

இவ்­வா­றான தரு­ணத்தில் தற்­போது இலங்­கையில் மற்­றொரு சிறு­பான்மை மக்­க­ளான முஸ்­லிம்­களை மைய­மாக வைத்து பல்­வேறு சம்­ப­வங்கள் அந் நாட்டின் பல பாகங்­க­ளிலும் நடை­பெற்­றுள்ளன.    அடக்­கு­மு­றைக்கு உட்­ப­டுத்­து­கின்ற எந்­த­வொரு சம்­ப­வங்­களும் கண்­டிக்­கத்­தக்­க­வை­யே­யாகும். 

அத­ன­டிப்­ப­டையில் உட­ன­டி­யாக இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை கைவிட வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்­களை சம உரி­மை­யுடன் நடத்தி அவர்­க­ளுக்­கான வாழ்­வு­ரி­மையை உறு­திப்­ப­டுத்த வேண்­டுமென்­பதை அழுத்தம் திருத்­த­மாக இடித்­து­ரைக்கும் வகையில் நாம் மாபெரும் கண்டன முற்­றுகைப் போராட்­டத்­தை மேற்கொள்ளவுள்ளோம். 

இதில் அனைத்து உணர்வாளர்களும் பங்கெடுத்து எமது கண்டனத்தையும் செய்தியையும் இலங்கை அரசாங்கத்துக்கு ெதளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.