கண்டி மாவட்டத்தின் திகன, மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளை கண்டித்து  புலம்பெயர் முஸ்லிம் மக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை  பேரவை வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.  

வன்முறைகளை கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டக்கோரியும் இந்த  ஆர்ப்பாட்டம்   ஜெனிவா வளாகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. 

புலம்பெயர் முஸ்லிம்  அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. 

இதேவேளை எதிர்வரும் 20ஆம் திகதி   திகன  வன்முறை  சம்பவம் தொடர்பான விசேட உபகுழுகூட்டமொன்று   ஜெனிவா வளாகத்தில்  நடைபெறவுள்ளது.  

இதில்  சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதுடன்  பலரும்  திகன விவகாரம் தொடர்பில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.