மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது மைத்துனரின் ஆணுறுப்பை அறுத்து அதை எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் மைத்துனர் இருக்கும் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரின் கணவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் அந்த பெண்ணை மைத்துனர் பல முறை பாலியல் துஷ்பிரயோரம் செய்துள்ளதோடு. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப் பெண்ணின் சகோதரியையும் இரவில் துஷ்பிரயேகம் செய்ய முயன்றுள்ளார். 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த பெண் அரிவாளை எடுத்து மைத்துனரின் ஆணுறுப்பை துண்டாக வெட்டியுள்ளார். பின் வெட்டிய ஆணுருப்பு பாகத்துடன் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார். 

இதையடுத்து பொலிஸார் அந்த பெண் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

இதற்கிடையே அந்த பெண்ணின் மைத்துனர் தனது வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். 

இதேவேளை குறித்த பெண்ணுக்கு மனநலம் சரியில்லை என்றும், அவர் தான் செய்த செயலுக்காக வருந்தவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.