(எம்.சி.நஜி­முதின்)

கூட்டு எதிர்க்­கட்சி இம்­முறை தொழி­லாளர் தினக்கூட்­டத்தை காலி சம­னல மைதா­னத்தில் நடத்­து­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ்ஷவின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற கூட்­டத்தின்போதே குறித்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

கூட்டு எதிர்­க்கட்சி கடந்த வருடம்போல் இம்­மு­றையும் மே தினக்­கூட்­டத்தை கொழும்பு காலிமுகத்­தி­டலில் நடத்­து­வ­தற்கு ஏற்­க­னவே தீர்­மா­னித்­தி­ருந்­தது. எனினும் காலிமுகத்­தி­டலில் புல் நடும் பணி நடை­பெ­ற­வுள்­ள­மை­யினால் அங்கு கூட்டம் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

என­வேதான் காலி சம­னல மைதா­னத்தில் மே தினக் கூட்டம் நடத்­து­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி தீர்­மா­னித்­துள்­ளது. அத்­துடன் அக்­கூட்­டத்தில் அதி­க­ள­வா­னோரை ஒன்­று­கூட்டி கூட்டத்தை வெற்றிகரமாக்கும் நடவடிக்கையிலும் அக்கட்சி இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.