“இலங்கையில் ஆட்சியை மாற்றவே ஜெனிவா பிரேரணைகள் : பாதிக்கப்பட்டோரின் நலன் கருத்திக் கொண்டுவரப்படவில்லை”

Published By: Priyatharshan

15 Mar, 2018 | 10:13 PM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த பிரேரணைகள் வரையப்பட்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இன்று ஜெனிவாவில் நடைபெற்ற உப குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜெனிவா வளாகத்தில் இன்று நடைபெற்ற இனப்படுகொலை என்ற தொனிப்பொருளிலான விசேட இலங்கை குறித்த உப குழுக் கூட்டமொன்றிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் 

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கை பிரச்சினைக்கு ஒரு சர்வதேச பரிமாணம் இருக்கின்றது. அதில் சர்வதேச தரப்பு வகிக்க வேண்டிய முக்கிய வகிபாகம் ஒன்றிருக்கிறது. 

உலகில் எங்கு இவ்வாறு நடந்தாலும் சர்வதேசம் அதில் தலையிட வேண்டும். அந்த விடயத்தில் இலங்கை விதிவிலக்கல்ல. இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

ஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த பிரேரணைகள் வரையப்பட்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன. 

அதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அப்படியே மறைக்கப்பட்டு விட்டது. இன்று அந்த நிலைதான் காணப்படுகின்றது. உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் எந்தவொரு இராணுவ வீரரும் சட்டத்தின் முன்கொண்டு வரப்படமாட்டார்கள் என கூறுகின்றனர். அதன்போது மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகளை கொண்டு வந்த நாடுகள் ஜனாதிபதியையும் பிரதமரையும் பாராட்டுகின்றன. கடந்த மூன்று வருடங்களாக பிரேரணையை கொண்டு வந்த நாடுகள் இலங்கையுடன் சிறந்த உறவில் இருக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24