சுமார் 17 இலட்சம் ரூபா பெறுமதியான ஒருதொகை கேரள கஞ்சா மன்னார் - முசலி பகுதியில் இருந்து கலால் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு 8 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 கிலோ 640 கிராம் கஞ்சா இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதேவேளை, சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், அவர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

எதிர்வரும் திங்கட்கிழமை (15) மீட்கப்பட்ட கஞ்சாவை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக மன்னார் மது வரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் மேலும் தெரிவித்தார்.