புத்தளம் - வனாத்தவில்லு பகுதியில் நேற்று தம்பியை அண்ணன் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய அதிர்ச்சி  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

17 வயதுடைய மூத்த சகோதரரே தனது தம்பியை  பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட இளைஞன்  புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.