தனது இறுதி லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியை 17 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி சுதந்திரக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் விளையாடும் முதல் அணியாக தன்னை உறுதிசெய்தது.

சுதந்­திரக் கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் இந்­திய அணி தனது கடைசி லீக் ஆட்­டத்தில் பங்­க­ளா­தே­ஷுடன் இன்று மோதியது.

இலங்கை, இந்­தியா, பங்­க­ளா தேஷ் ஆகிய நாடுகள் பங்­கேற் கும் முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது ‘லீக்’ போட்டி இன்று ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பாக அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா 89 ஓட்டங்களையும் தவான் 35 ஓட்டங்களையும் ரெய்னா 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் ரூபெல் ஹுசெய்ன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 177 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி இறுதிவரை போராடி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று 17 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் முஸ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்கது 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் வொஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி ஒரு போட்டியில் தோல்வியுற்று 6 புள்ளிகளுடன் முதலாவது அணியாகவும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி ஒரு போட்டியில் வெற்றி 2 போட்டியில் தோல்வியுற்று 2 புள்ளிகளுடன் 2 ஆவது அணியாகவும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள பங்களாதேஷ் அணி ஒரு போட்டியில் வெற்றி 2 போட்டிகளில் தோல்வியடைந்து 2 புள்ளிகளுடன் 3 ஆவது அணியாகவும் உள்ளன.

இந்நிலையில் நாளை மறுதினம் இடம்பெறும் போட்டி இறுதிப் போட்டியை விட முக்கியமானதொரு போட்டியாக இலங்கை மற்றும் பங்களாஷே் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

இப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்த்தாடவுள்ளது.