சென்னை மாம்பலம் பகுதியில் தாயின் இடுப்பிலிருந்த குழந்தை இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள குடியிருப்பில் 2வது மாடியில் முத்துராஜ், மகேஷ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. மகேஷ்வரி தனது குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு துணிகளை காய வைத்துக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக இடுப்பில் இருந்த குழந்தை மாடியிலிருந்து கீழே விழுந்தது. 2வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் குழந்தைக்கு பலத்த அடி ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

உடனே அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.