இலங்கையில் 489 பொலிஸ் நிலையங்கள் இருக்கின்ற நிலையில்  490  ஆவது பொலிஸ்நிலையம் கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  வடமாகாண  சிரேஸ்ட  பிரதிப்பொலிஸ்மா அதிபர் றோசான் பெர்னாண்டோ, கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்ன மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  கணேசநாதன்  ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


இவ் பொலிஸ் நிலையமானது யுத்தம் முடிவடைந்து மக்கள் மீள்குடியேற்றப்பட்டதில் இருந்து பொலிஸ் காவலரணாக இயங்கி வந்தது. இக் காவலரண் மிகவும் சிறப்பாக இயங்கியமையால் இது பொலிஸ் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு  இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


அக்கராயன் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரியாக  எம்.எம்.டி.என்  சத்துரங்கவை பொலிஸ்  தலைமை அலுவலகத்தால் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர் கடந்த காலத்தில் தர்மபுரம் பொறுப்பதிகாரியாக செயற்பட்டதுடன் இவர் சிறந்த பொலிஸ் சேவைக்காக இவர் பலமுறை கௌரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.