அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய அலுவலகத்திற்கு கடந்த ஒரு ஆண்டுகளாக ஹை ஹீல்ஸ்களை அணிந்து செல்வது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த Ashley Maxwell-Lam கடந்த 1 ஆண்டாக தன்னுடைய அலுவலகத்திற்கு 6 இன்ச் ஹை ஹீல்ஸை அணிந்து செல்கிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது,

"இதைப் பற்றி வெட்கப்படவோ, ரகசியமாக சொல்லவோ வேண்டிய அவசியமில்லை எனவும் ஒருநாள் நான் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த போது என்னுடைய சப்பாத்தை  காணவில்லை.

நான் என்னுடைய தங்கையின் ஹை ஹீல்சை அணிந்து சென்றேன். வீதியில் நான் நடந்து சென்ற போது என்னை அனைவரும் ஒரு வித்தியாசமாக பார்த்தனர். நான் அவர்களை கடந்து சென்ற போதும் அவர்கள் என்னை திரும்பி திரும்பி பார்த்தனர்.

இது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது, அதன் காரணமாகவே தொடர்ந்து ஹை ஹீல்சை அணிய ஆரம்பித்தேன்" என்று கூறியுள்ளார்.

இதைத் தவிர அவரது ஆடைவடிவமைப்பாளர் சப்பாத்தை  விட உங்களுக்கு ஹீல்ஸ் தான் அழகாக இருக்கிறது என்று கூறியுள்ளதால் அவர் தொடர்ந்து அலுவலகத்திற்கு ஹீல்ஸ்களையே அணிந்து சென்று வருகிறார்.

இதனால் மிகவும் பிரபலமாகியுள்ள Ashleyயை உள்ளூர் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.