தெஹியத்தகண்டி பிரதேசத்தில் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் இரு மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இரு மாணவிகள் பாடசாலை முடிந்து வீட்டிற்க்கு சென்று கொண்டிருக்கும் வேலையில் 21 வயதான சிறிய ரக வாகனம் ஓட்டும் சாரதியே மாணவிகளுக்கு இவ்வாறு ஆபாச படங்களை காட்டியதாகவும் இதனால் பதட்டமடைந்த மாணவிகள் கல்லால் அந்த சாரதியை தாக்கியதாகவும் பின்னர் வீட்டுக்கு வந்த மாணவிகள் பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறி தாம் குறித்து வைத்திருந்த லொறியின் இலக்கத்தை கொடுத்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட 21 வயதான சாரதி மஹியங்கன நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவான் எதிர் வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM