நாட்டின் பாது­காப்பை கருத்­திற்­கொண்டு அர­சாங்­கத்தால் முடக்­கப்­பட்­டி­ருந்த வட்ஸ்அப் சேவை இன்று நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பும் என  ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண நிலைமையை அடுத்து, சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் போன்றனவுக்குத் தடை விதிக்கப்பட்டு முடக்கப்பட்டன.

மேலும், இவற்றில் வைபர் சேவை நேற்று நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் அனைவராலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பேஸ்புக் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பேஸ்புக் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நாளை தினம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக நாளை மறுநாள் இலங்கை முழுவதும் பேஸ்புக் மீதான தடை நீக்கப்படும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.