ஆன்மீக சொற்பொழிவாளர் கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் இன்று காலமானார்.

சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

1937 ஆம் ஆண்டு பிறந்த வசந்தா வைத்தியநாதன்  வாழ்நாளின் பெரும் பகுதியை ஆன்மீகத்திற்காவே அர்ப்பணித்திருந்தார். 

இந்நிலையில் அவர் தனது 81 ஆவது வயதில் இன்று  இயற்கையெய்தியுள்ளார்.

கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன், இலங்கையில் நன்கு அறியப்பட்ட சைவவித்தகராகவும்  வானொலியூடாகவும் பிரசங்கங்கள் செய்பவர். ஆலய திருவிழாக்களின் போது நேரடி வானொலி வர்ணனைகளிலும் ஈடுபட்டுள்ளார்.