கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் 'வேதாளம்' 'டீசர்' வெளியாகி பத்து மணி நேரத்தில் 79,000 லைக்குகளை பெற்று சாதனை புரிந்த நிலையில் அதே பத்து மணி நேரத்தில் 120,000 லைக்குகளை அள்ளி விஜய்யின் 'தெறி' படத்தின் 'டீசர்', 'வேதாளம்' சாதனையை முறியடித்துள்ளது. மேலும் 'வேதாளம்' டீசர் பெற்ற மொத்த லைக்குகளான 140,000 லைக்குகளை 'தெறி' டீசர் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் 'புலி' படத்தின் தோல்வியால் துவண்டு இருந்து விஜய் ரசிகர்கள் அட்டகாசமான 'தெறி' படத்தின் டீசரால் உற்சாகத்தில் உள்ளனர். அட்லியின் இயக்கத்தில் மிகவும் வித்தியாசமான கெட்டப்புகளில் விஜய் தோன்றுவதால் இந்த படம் வசூலிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான விஜய் ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு டீசர் சூப்பராக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.