யேமனின் துறைமுக நகரான எடெனில் இன்று  இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவுதி தலைமையிலான தாக்குதல்களை மேற்கொண்டுவரும் யேமனிய படைகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

நகரில் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.