எம்.எம்.மின்ஹாஜ்

கண்டி தெல்தெனிய வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் ஒரு சிலர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கொழும்பிலும் இவ்வாறான வன்முறையை தூண்டுவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சித்தனர். எனினும் நாம் அதனை தடுத்து நிறுத்தினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

Image result for ரவி கருணாநாயக்க virakesari

மேலும் சமூக வலைத்தளங்களில் ஊடாக நல்லிணக்கத்தை சீர்குலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஸ்திரமான பொறுப்புகூறலின் பிரகாரமே சமூக வலைத்தளங்களை திறக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடலங்கவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.