கண்டி சம்­ப­வத்­தை­ய­டுத்து இன­வாத கருத்­துக்கள்  வீண் வதந்­திகள் பர­வா­ம­லி­ருக்கும் வகையில்  நாட்டின் பாது­காப்பை கருத்­திற்­கொண்டு அர­சாங்­கத்தால் முடக்­கப்­பட்­டி­ருந்த பேஸ்புக், வட்ஸ்அப் உட்பட சமூக வளை­த­ளங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்த கலந்துரையாடல் ஒன்று குறித்த நிறுவன அதிகாரிகளுக்கும் அரசுக்கும் இடையே எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கண்­டியில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்­க­ளை­ய­டுத்தே பேஸ்புக் , வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலை­த­ளங்கள் இலங்கை தொலை­தொ­டர்­புகள் மற்றும் ஒழுக்­காற்று ஆணைக்­குழு தற்­கா­லி­க­மாக முடக்­கி­யி­ருந்­தது. 72 மணித்­தி­யா­ல­யங்­க­ளுக்கு மட்­டுமே இக்­கட்­டுப்­பாடு என அறி­விக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் தொடர்ச்­சி­யாக இவை முடக்­கப்­பட்ட நிலை­யி­லேயே இருக்­கின்­றன.