ஜெனி­வாவில் இலங்கை குறித்த முத­லா­வது விவாதம்

Published By: Robert

13 Mar, 2018 | 12:32 PM
image

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்­டத்­தொடர் ஜெனிவா வில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் எதிர்வரும் வெள்ளிக்­கிழமை இலங்கை மனித உரிமை நிலை­வரம் குறித்த பூகோள காலக்­கி­ரம மீளாய்வு விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஜெனி­வாவில் இம்­முறை இரண்டு விவா­தங்கள் இலங்கை  தொடர்பில்   நடை­பெ­ற­வுள்ள நிலையில்    முத­லா­வது விவா­தமே  எதிர்­வரும்  வௌ்ளிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. 

Image result for ஜெனி­வா

கடந்த  2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு  மீண்டும்  2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்­புக்கு உட்­பட்ட  இலங்கை குறித்த பிரே­ர­ணையின் அமு­லாக்­கத்தை  அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே இந்த   விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. 

ஏற்­க­னவே இலங்கை குறித்த பூகோள காலக்­கி­ரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர்  மாதம் நடை­பெற்­றது.  அதன்­போது இலங்கை  குறித்த  பல்­வேறு  பரிந்­து­ரைகள் அடங்­கிய   அறிக்கை ஒன்றும்  நிறை­வேற்­றப்­பட்­டது.  அந்த அறிக்­கையில் 50 க்கும் மேற்­பட்ட  நாடு­க­ளினால் 100 க்கும் மேற்­பட்ட  பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­த­துடன்  அவை திருத்­தங்­ளுடன் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தன.  

இலங்கை குறித்த அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தா­வது 

வெ ளிநாட்டு நீதி­ப­திகள் மற்றும் வழக்­க­றி­ஞர்­களை கொண்டு பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை உரு­வாக்­க­வேண்டும்.  அத்­துடன் . வடக்கு கிழக்கில் பொது மக்­களின் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­க­வெண்டும். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­கு­வ­துடன் ஐ.நா. பிரெ­ர­ணையை முழு­மை­யாக  அமுல்­ப­டுத்­த­வெண்டும்.     

   காணாமல் போனோர் குறித்த அலு­வ­ல­கத்­துக்கு   சுயா­தீன ஆணை­யா­ளர்­களை நிய­மிக்­க­வேண்டும். ( தற்­போது ஆணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது) 

அந்த அலு­வ­ல­கத்­துக்கு தேவை­யான வளங்கள் வழங்­கப்­ப­டு­வ­துடன் சரி­யான அதி­கா­ரி­களும் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். இதற்கு முன்னர்  காணாமல் போன­வர்கள் குறித்து ஆராய்ந்;த ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள்  உட­ன­டி­யாக வெளி­யி­டப்­ப­ட­வேண்டும். 

காணாமல் போதல்கள் தன்­னிச்­சை­யான தடுத்து வைத்­தல்கள் என்­பன  தொடர்பில் சுயா­தீ­ன­மான விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதை உறு­தி­ப­டுத்­த­வேண்டும். தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள்  தொடர்­பான விப­ரங்­களை  உற­வி­னர்­க­ளுக்கு வழங்­குங்கள். 

யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரிக்க சர்­வ­தேச உத­வி­களை பெற­வேண்டும்.  அத்­துடன்   மனித உரிமை மீறலில் ஈடு­பட்ட   படை­யினர் மற்றும் அரச அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக  சட்ட நட­வ­டிக்கை எடுங்கள். ( இந்த பரிந்­து­ரையை அமெ­ரிக்கா முன்­வைத்­தி­ருந்­தது)

சர்­வ­தேச உத­வி­யுடன்   நம்­ப­க­ர­மான    பாதிக்­க­பட்ட மக்­களை  கேந்­தி­ர­மாக கொண்ட   பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வேண்டும். உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு நட்­ட­ஈடு வழங்கும்   அலு­வ­லகம்  என்­ப­ன­வற்றை நிய­மிக்­க­வேண்டும். 

வெ ளிநாட்டு நீதி­ப­திகள் மற்றும் வழக்­க­றி­ஞர்­களை கொண்டு பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை உரு­வாக்­கு­வ­துடன் வடக்கு கிழக்கில் பொது மக்­களின் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­க­வெண்டும். இவ்­வாறு பல்­வேறு பரிந்­து­ரைகள் இலங்கை குறித்த அறிக்­கையில்  முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. 

இந்­நி­லையில் வௌ்ளிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள அமர்வில் முதலில்  ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசேன்  உரை­யாற்­றுவார்.   அல் ஹுசேன்  ஏற்­க­னவே இலங்கை    தொடர்பில்  வெ ளியிட்­டுள்ள அறிக்­கையை  மேற்­கோள்­காட்­டியே     கருத்து வெ ளியி­ட­வுள்ளார்.  

அதனைத்  தொடர்ந்து இலங்­கையின் சார்பில்     தூதுக்­கு­ழுவின் தலைவர்  உரை­யாற்­றுவார்.       குறிப்­பாக  வௌ்ளிக்­கி­ழமை விவா­தத்தில் ஜெனி­வா­வுக்­கான இலங்கை தூதுவர் உரை­யாற்­றுவார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

அதன் பின்னர்   ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை பேரவை உறுப்பு நாடு­களின்  பிர­தி­நி­திகள் மற்றும்   சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.    

இலங்கை  அர­சாங்கம்  சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்­டு­மென தெரி­வித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில்  பிரே­ரணை ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டது.  அந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும்  அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. 

அந்தப் பிரேரணையானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற  ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது  கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு  இலங்கைக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி  எதிர்வரும்  2019ஆம் ஆண்டு வரை   இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.   

கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்  தொடர் எதிர்வரும் 23 ஆம்  திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50