சுதந்திரக்கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் முக்கிய போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறுகின்றது.

பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணகள் மோதும் சுதந்திரக் கிண்ண முக்கோணத் தொடர் இடம்பெற்றுவருகின்றது.

இத்தொடரில் 3 அணிகளுமே 2 போட்டிகளில் விளையாடிய நிலையில் 3 அணிகளும் தலா 2 புள்ளிகளைப்பெற்றுள்ளன.

இருப்பினும் புள்ளிப்பட்டியலில் ஓட்டசராசரியில் இலங்கை அணி முதலிடத்திலும் இந்திய அணி 2 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் அணி 3 ஆவது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் இன்றைய முக்கிய போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் ஒன்றையொன்று சந்திக்கின்றன.

இன்றைய போட்டியில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புக்கள் இருந்ததால் போட்டி தாமதமாகியே ஆரம்பித்தது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.

மழை காரணமாக தாமதித்து ஆரம்பமாகிய இப்போட்டி ஒரு ஓவர் குறைக்கப்பட்ட நிலையில் 19 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.