பங்களாதேஷ் எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான டாஷ் கியூ -400  என்ற பயணிகள் விமானமொன்று விபத்திற்குள்ளானதில் அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த விமானம் இன்று காலை பங்களாதேஷின் டாக்கா நகரில் இருந்து நேபாளம் நோக்கி பயணித்த போது நேபாளம், திபுடான் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானத்தில் விபத்து இடம்பெறும் போது 67 பயணிகளும் 4 விமான சிப்பந்திகளும் இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விமான விபத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர. இதேவேளை, 10 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.