களனி , பியகம பிரதேசங்களிலும் மற்றும் பேலியேகொட , வத்தளை நகர சபை பிரதேசங்களிலும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அன்படி நாளை காலை 9 மணி துால் மாலை 6 மணிவரையிலான 9 மணித்தியாலத்திற்கு குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய நடவடிக்கைகளின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.