ஜனா­தி­பதிக்கு கோத்­த­பாயவே பொருத்­த­மா­னவர்.!

Published By: Robert

12 Mar, 2018 | 10:11 AM
image

இலங்­கையின் அடுத்த நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யி­டு­வ­தற்­கான அனைத்து தகை­மை­களும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு காணப்­ப­டு­கின்­றது. 2020ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பாரிய மாற்­றங்கள் உரு­வா­கு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­கின்­றன என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார்.

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட கூட்டு எதிர்­க்கட்­சியின் பொது வேட்­பா­ள­ராக கோத்­த­பா­யவை கூட்டு எதி­ர­ணியின் பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் ஆத­ரிக்­கின்­றமை தொடர்பில் வின­விய போது அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் 

இலங்­கையில் 1978ஆம் ஆண்டு ஜெ.ஆர் ஜெய­வர்­த­ன­வினால் அறி­முகம் செய்­யப்­பட்ட நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனாதி­பதி முறை­மை­யா­னது அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்கு நிக­ரான அதி­கா­ரங்­களை கொண்­ட­தா­கவே காணப்­பட்­டது. 

அர­சியல் விவ­கா­ரங்­களில் நாட்டு தலை­வ­ருக்கே சர்வ வல்­லமை பொருந்­திய அதி­கா­ரங்கள் காணப்­பட்­டன. 1978 தொடக்கம்  2014 வரை இவ்­வ­தி­காரம் நடை­மு­றையில் பின்­பற்­றப்­பட்டு வந்­தது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் ஜனா­தி­பதி பதவி வெறும் அலங்­கார பத­வி­யா­கவே காணப்­ப­டு­கின்­றது. நிறை­வேற்று அதி­கா­ரத்­தினை தற்­போ­தைய ஜனா­தி­பதி இது­வரை பயன்­ப­டுத்­தாமல் பிர­த­ம­ருக்கு தனது நிறை­வேற்று அதி­கா­ரத்­தினை தாரை­வார்த்துக் கொடுத்­துள்ளார். 19 ஆவது அர­சியல் திருத்­தத்தின் படி ஜனா­தி­ப­திக்கு நிறை­வேற்று அதி­காரம் பெய­ர­ள­விலும், பிர­த­ம­ருக்கு மறை­மு­க­மா­கவும் பலம் பெறு­வ­தாக காணப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் கூட்டு எதிர்­க்கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பொது வேட்­பா­ள­ராக கோத்­த­பாய போட்­டி­யி­ட­வுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. கடந்த காலத்தில் அவர் மீது சுமத்­தப்­பட்ட பொய் குற்­றச்­சாட்­டுக்கள் எதையும் நல்­லாட்சி அர­சாங்­கத்தால் நிரூ­பிக்­க­மு­டி­ய­வில்லை. நீதித்­து­றையும் உண்­மை­யி­னையே நிலை­நாட்­டி­யுள்­ளது. 

 கூட்டு எதிர்­க்கட்­சியை ஆத­ரிக்­கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவும் கிடைக்­கப்­பெறும். ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­னர்கள் தற்­போது நிலை­யற்ற அர­சாங்­கத்தில் இருந்து விலகி நிலை­யான அர­சாங்­கத்­தினை உரு­வாக்க முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். அதன் வெளிப்­பா­டா­கவே  பிர­த­ம­ருக்கு எதி­ராக ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் சிவப்புக் கொடி காட்­டி­வ­ரு­கின்­றனர்.

நாட்டின்  நிர்­வா­கத்­தினை மித­வாத முறையில் மாத்­திரம் ஒழுங்­காக நிர்­வ­கிக்க முடி­யாது. மக்­களின் நல­னுக்­காக ஆட்­சி­யாளர்  அதி­ர­டி­யான போக்­கு­க­ளையும் கடைப்­பி­டிக்­கலாம் . அதுவே அர­சியல் சித்­தாந்தம். இவற்றை நல்­லாட்சி அரசாங்கம் கடைப்பிடிக்க தவறவிட்டமையின் காரணமாகவே கடந்த காலங்களில் சிறு பிரச்சினைகளுக்கு கூட தொடர்ச்சியான போராட்டங்கள் இடம் பெற்றன. இதன் காரணமாக அப்பாவி பொது மக்களே பாதிக்கப்பட்டனர். ஆகவே இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு கோத்தபாய ராஜபக் ஷ பொருத்தமானவராகவே காணப்படுகின்றார். என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59