ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஜெனிவா நோக்கி பயணித்து வருகின்றனர்.
வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்கனவே ஜெனிவா சென்றுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவை சென்றடையவுள்ளார். கொழும்பிலிருந்து நேற்று புறப்பட்ட அவர் லண்டன் சென்று அங்கிருந்து ஜெனிவா செல்கின்றார்.
இதேபோன்று வடமாகாண அமைச்சர் ஆனந்தி சசிதரனும் நேற்று அங்கு பயணமாகியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அங்கு நடைபெறும் உப குழுக் கூட்டங்களில் பங்கேற்பதுடன் ஜெனிவாவிலுள்ள இராஜாதந்திரிகளையும் அரச சார்பற்ற பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன் ஆணைக்குழு அமர்வில் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் உரையாற்றவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.