காத்தான்குடியில் காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த வர்த்தகர் ஒருவர் இன்று மாலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கடியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு- காத்தான்குடி நகரில் பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனத்தின் வர்த்தகரை காணவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் அவர் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 35 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை காத்தான்குடி  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக செய்திகளுக்கு காத்தான்குடியில் பிரபல வர்த்தகர் மாயம்